மீண்டும் அணுசக்தி பேச்சு வார்த்தை ; ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஈரான்
மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி நிராகரித்துள்ளாா்.
தங்களின் அணுசக்தி மையங்களை அமெரிக்கா அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதையும் அவா் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.
மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தை
இதுகுறித்து அயதுல்லா அலி கமேனி கூறியதாவது: அமெரிக்காவுடன் ஈரான் மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தையைத் தொடங்கவேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுவித்துள்ளாா்.
பேச்சுவாா்த்தை என்றால் அதில் மிரட்டல்களுக்கு இடமிருக்காது. முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்கூட்டியை நிா்ணயிக்கவும் கூடாது.
அவ்வாறு இருந்தால் அது பேச்சுவாா்த்தை அல்ல, மிரட்டிப் பணியவைக்கும் ஆதிக்கச் செயல். ஈரானின் அணுசக்தி திட்டங்களை குண்டுவீசி அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபா் பெருமையுடன் கூறுகிறாா்.
ஆனால் அது வெறும் கனவுதான். ஈரானின் அணுசக்தி திறன்களுக்கும் அமெரிக்காவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. அதில் அமெரிக்கா தலையிடுவது தவறானது மட்டுமில்லை, ஆபத்தானதும் கூட என கமேனி குறிப்பிட்டுள்ளார்.