தொடர்ந்து அச்சுறுத்தும் அமெரிக்கா ; ஹார்மூஸை திறக்கமுடியாது, ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களும், தலையீடுகளும் நீடிக்கும் வரை பன்னாட்டு கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கமுடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
“அமெரிக்காவின் மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும், கடல்வழிப் போக்குவரத்தில் அவர்களின் தலையீடும் தொடரும் வரை, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முடியாது” என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்மூஸ் நீரிணையை அமைதியான முறையில் இரு நாடுகளும் இணைந்து (50-50 என்ற விகிதத்தில்) நிர்வகிக்கலாம் என்ற அண்டை நாடான ஓமனின் சமரச திட்டத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
மேலும் முன்பு இருந்ததைப்போல, அதாவது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைப் போல, அனைவருக்கும் தடையற்ற சுதந்திரமான அணுகல் நிலைக்கு ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திரும்பாது என்று ஈரான் மீண்டும் தெரிவித்துள்ளது.