கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டம் ; எச்சரிக்கும் ஈரான்
எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை கைப்பற்ற தரை வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.
ஈரானின் கார்க் தீவில் உள்ள முக்கிய எண்ணெய் வளம் நிறைந்த பகுதியை கைப்பற்ற அமெரிக்கா முயற்சிக்கும் என தகவல் வெளியானது.

இதற்காக, தரைவழி தாக்குதலை நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப்பின் உத்தரவின்பேரில் அதனை தன்னுடைய கட்டுக்குள் எடுத்து கொள்வதற்கான திட்டங்களில் அமெரிக்க ராணுவம் தீவிரத்துடன் ஈடுபட்டு வருகிறது.
இதுபற்றி ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகே கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க வீரர்கள் தரை வழியே தாக்குதலில் ஈடுபட்டால், அவர்களை வரவேற்பதற்காக ஈரான் மக்கள் தயாராக காத்திருக்கின்றனர். அமெரிக்க வீரர்கள் கடுமையான விளைவுகளை சந்திப்பார்கள். அவர்களின் வருகைக்காக அந்த பகுதிகளில் நிறைய பேர் ஆவலுடன் உள்ளனர் என கூறியுள்ளார்.
ஒருபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என கூறி வந்தபோதிலும், மறுபுறம் படைகளை வான், கடல், தரை என பல வழிகளில் ஈரானை நெருக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என தகவல் வெளியானது.
இந்த சூழலில், தற்போது மீண்டும் ஈரானை தரை வழியே நெருங்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்று வெளியான தகவலை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது.