அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!
ஈரானின் அணைகள் தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அல்லது இஸ்ரேலிய இராணுவத் தளங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு அணை, துறைமுகம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தையும், இராணுவ நோக்கத்திற்காகப் பயன்படும் ஒரு “இரட்டைப் பயன்பாட்டு வசதியாகவே தெஹ்ரான் கருதும் என்று ஈரான் பாராளுமன்ற சபாநாயகரும், உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் சில அணைகள் அதன் ஏவுகணை வசதிகளுக்காகக் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்திக்கு காலிபாஃப் பதிலளித்து வந்தார்.
எக்ஸ் தளத்தில் அவர் எழுதிய ஒரு பதிவில், “பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகும் நிலையில், ‘ஈரானின் ஏவுகணைத் தளங்களுக்கு அருகிலுள்ள அணைகள் இரட்டைப் பயன்பாடு கொண்டவை’ என அவர்களின் ‘நிபுணர்கள்’ நியூயார்க் டைம்ஸிடம் கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.