சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய ஆளில்லா விமானம் ; அமெரிக்க இராணுவத்தின் செயற்பாட்டால் பதற்றம்
அரேபிய கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி பறந்து கொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்க இராணுவம் நேற்று (3) சுட்டு வீழ்த்தியுள்ளது.
ஈரானிய ஷாஹெட்-139 ஆளில்லா விமானம் கப்பலை நெருங்கும் போது அமெரிக்க F-35 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
BREAKING:
— Commentary: Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) February 3, 2026
🇺🇸🇮🇷 The U.S. Navy has shot down an Iranian drone that approached the USS Abraham Lincoln in the Arabian Sea - Reuters pic.twitter.com/bUBVLv1oyO
இந்த தாக்குதல், இப்பகுதியில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டு வரும் நிலையில் நடந்துள்ளது.
ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பின்னர், ஈரான் மேலும் இரு ட்ரோன்களை குறித்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.