சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல் பகுதியை குறிவைத்து தாக்கிய ஈரானின் ட்ரோன்கள்
சவுதி அரேபியா, குவைத் மீது ஈரான் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் எண்ணெய் வயல் பகுதியை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த டிரோன் சவுதியின் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல், குவைத் நாட்டின் வடக்கு,தெற்கு பகுதிகளை குறிவைத்து 6 டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த ட்ரோன்களும் குவைத் வான்பாதுகாப்பு அமைப்பால் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக, சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.