பெட்டைகோழி கூவி பொழுது விடியுமா?
இன்றைய காலகட்டத்தில் கொரோனாவால் அதிகமாக பெண்களே வீட்டில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக பலரும் மன அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர். இன்னும் ஆளாகியும் வருகின்றனர். சிலரின் பொழுதுபோக்கிற்காக சோசியல் மீடியாக்களில் பல பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் கேலி கிண்டல்களும் ஏராளம்.
அவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்ள பயந்து எத்தனையோ பெண்கள் தங்கள் கனவுகளையும் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்கின்றனர். பயந்து பயந்து பெண்கள் அடிபணிந்து போவதனால் தான் அவர்களை ஏய்ப்பவர்களும் வளர்ந்துகொண்டே போகின்றார்கள்.
பொறுமையின் இருப்பிடமாக பெண்கள் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அநியாயத்தை கண்டு பயந்து செல்லாமல் உங்களுக்குரிய பாதையில் நீங்கள் நிமிர்ந்து நடந்தால் தான் உங்களுக்கான எதிர்க்காலத்தின் கதவும், உங்கள் கனவுகளுக்காக வழிவிடும் .