இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் பலியான ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர்?
இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் படையின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், ஒக்டோபர் 7 தாக்குதல் சம்பவத்தின் முக்கிய நபர்களில் ஒருவருமான யஹ்யா சின்வர் கொலை செய்யப்படிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றையதினம் (17-10-2024) இஸ்ரேல் ராணுவம் காசாவில் மேற்கொண்ட தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது காசா நடத்திய திடீர் தாக்குதல் திட்டத்தின் முக்கிய நபராக யஹ்யா சின்வர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த குடியிருப்பினுள் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம், “இஸ்ரேல் ராணுவம் இன்று காசாவில் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டுள்ள 3 தீவிரவாதிகள் குறித்தும் இஸ்ரேல் ராணுவம் விசாரித்துவருகிறது.
அந்த மூவரில், ஒருவர் யஹ்யா சின்வராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.