ஈரான் மீதான தாக்குதலை முடித்த இஸ்ரேல்... பாதிப்புகள் என்ன?
இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் திகதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியதையடுத்து அதற்கு இஸ்ரேல் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணித்தியாலங்களிலேயே இஸ்ரேல் நடத்தி முடித்துள்ளது.
இந்த தாக்குதலுக்காக 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வானுக்குள் வந்துள்ளன.
Israel's attack on Iran was limited to military targets, not nuclear or oil facilities, — CBS News pic.twitter.com/AbVAgaTDGr
— V141NG (@inexorable_V) October 26, 2024
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கும் எண்ணெய் கிணறுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் துல்லியமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று கட்டங்களாக நடந்த இந்த தாக்குதலில் முதற்கட்டமாக ஈரான் பாதுகாப்பு அமைப்பிகள் தாக்கப்பட்டன.
இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தாக்குதலில் ஈரானின் மிசைல்கள் மற்றும் டிரோன்கள் உள்ள தளவாடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் உள்ள துல்லியத்தன்மை இதை இஸ்ரேல் வெகு காலமாக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.