இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் முடிவுக்கு... ஜோ பைடன் வெளியிட்ட தகவல்!
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பிணைக்கைதிகள் பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அமெரிக்காவின் தீவிர ராஜதந்திரத்திற்குப் பிறகு எகிப்து மற்றும் கத்தார், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
ஜனவரி 20 அன்று முடிவடையும் தனது நிர்வாகத்தின் கடைசி வெளியுறவுக் கொள்கை நிறைவேற்றமாக இந்த ஒப்பந்தத்தை உருவாக்குகிறது.
இந்த ஒப்பந்தம் காசாவில் சண்டையை நிறுத்தும். பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும்.
மேலும் 15 மாதத்திற்கு மேலாக சிறைபிடிக்கப்பட்ட பிணைக்க்கைதிகளை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கும்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது பல கட்டமாக நடைபெறும் என்றும், ஜனவரி 19-ம் திகதி அமலுக்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முதல் 42 நாளில் 33 பிணைக்கைதிகளை ஹமாஸ் படைகள் விடுவிக்க உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.