ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்த இஸ்ரேல்!
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவரான 62 வயதான இஸ்மாயில் ஹனியி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் நேற்றையதினம் கொல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இவர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 13-ம் திகதி தெற்கு காசாவில் முகமது தைப் வசித்து வந்த கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
குறித்த தாக்குதலில் முகமது தைப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை இஸ்ரேல் பாதுகாப்பு படை தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.