அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்; விடாப்பிடியாய் நிற்கும் இஸ்ரேல் அமைச்சர்
அமெரிக்கா வலியுறுத்தினாலும் லெபனானில் இருந்து தங்களது நாட்டு விமானப்படையை வாபஸ் பெற மாட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
இன்று நடந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால், அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியாகி உள்ளது. அந்நாட்டில் இருந்தும் ராணுவ வீரர்களை திரும்ப பெற மாட்டோம் என இஸ்ரேல் கூறி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது: லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம், விமானப்படையை திரும்ப பெற்றுக் கொள்ளப்பட மாட்டோம்.
அமெரிக்கா கோரிக்கை வைத்தாலும், அந்தப் பகுதியில் இருந்து வீரர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள். இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட மாட்டார்கள்.
2 லட்சம் பேர் மீண்டும் திரும்ப மாட்டார்கள். கடந்த காலங்களிலும் பாதுகாப்பு மண்டலங்களில் மக்கள் இருந்த போதும் வெடிகுண்டுகள் வெடித்தன என அவர் கூறினார்.