விசேட பாதுகாப்பு கூட்டத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்துவார் என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பானது, ஈரான் மீதான எதிர்ப்பை அடிப்படையாக கொண்டமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பு செயளாலர் இடாமர் பென்-க்விர் போன்ற தரப்புடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஹிஸ்புல்லாவுடனான மோதல் இப்போது ஈரானுடனான போரின் ஒரு பகுதியாக கட்டமைக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் - சிசேரியாவில் உள்ள நெதன்யாகுவின் இல்லத்தை நேற்று குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை ஒரு படுகொலை முயற்சியாக இஸ்ரேல் கருதுகிறது.
மேலும், ஈரான் அதன் பின்னால் இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்துகிறது.
எனினும், இந்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று ஈரான் கடுமையாக மறுத்துள்ளது.