காசாவில் இஸ்ரேல் தாக்குதல் ; 9 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு
பலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய இரு தனித்தனி தாக்குதல்களில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட குறைந்தது எட்டு பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் பொலிஸ் அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு ஒக்டோபரில் அமுலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னரும் காசா பகுதியில் தாக்குதல்கள் தொடர்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோதிலும் தொடரும் உயிரிழப்புகள் காசா மக்களிடையே பெரும் அச்சத்தையும் மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளன.