நெதன்யாகு வெளியிட்ட ரகசியத்தால் பற்றி எரியும் இஸ்ரேலிய நகரம்
தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தற்போது பொது வெளியில் பகிரங்கமாக தெரிவித்துள்ளமை மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
லெபனானில் கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு உறுப்பினர்களின் பாக்கெட்டுகளில் இருந்த தொலைத்தொடர்பு கருவியான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.
இந்த டெக்கனிகல் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று யூகிக்க முடிந்தாலும் இது பற்றி அந்நாடு வாய் திறக்காமல் இருந்தது.
இந்நிலையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா சரமாரியாக நடத்திய ராக்கெட் தாக்குதல் நிலைமையை மோசமாகியுள்ளது
லெபனானில் இருந்து ஏவப்பட்ட சுமார் 165 ராக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா பே பகுதியில் மக்கள் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் மேல் பாய்ந்தது.
இந்த தாக்குதலில் 1 வயது பெண் குழந்தை, 27 வயது பெண், 35 வயது ஆண் உள்பட மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
80 ராக்கெட்டுகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு படை இடைமறித்து அளித்ததால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. மீதமுள்ள ராக்கெட்டுகள் திறந்த வெளிகளில் விழுந்தன.
கியாத் அடா பகுதியில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
Breaking: Over 90 rockets were launched by Hezbollah into Israel this morning. Hezbollah continues to provoke Israel and escalate this war.
— Eyal Yakoby (@EYakoby) November 11, 2024
This is not a military base in flames, it’s an Israeli town. pic.twitter.com/4ZjVTmy9IH
ஹைபா பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவே பெரிய அளவிலானது என்று அறிக்கை வெளியாகி உள்ளது.
மேலும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இஸ்ரேல் ராணுவம் அலர்ட்டில் உள்ளது.
தற்போதைய தாக்குதல் குறித்து கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா இந்த ராக்கெட்டுகளை ஏவ பய்னபடுத்திய லான்சர்களை டிரோன் தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
Vivid reported: Over 80 rockets were launched by Hezbollah at Israel since this morning, 1 hypersonic missile by the Houthis, and over 4 drones from Iraq. Israel is fighting for its existence for 402 days, completely alone. pic.twitter.com/YIHoHzRhL5
— Midnight Crier (@prepperdaves) November 11, 2024