பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் இலக்கு வைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் ஒரு பகுதியில் இன்று (02) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகவும் துல்லியமானது என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

எனினும் அவர் கொல்லபப்ட்டாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
அதேவேளை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நடத்தி வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.