ஏவுகணை தாக்குதலால் கடும் கோபத்தில் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நேற்று (04) ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கோபமடைந்துள்ளார்.
இந்நிலையில் , “இனி ஒரு முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம். தொடர் தாக்குதல் நடத்துவோம்...” என பதிலடி கொடுத்து காணொளியொன்றை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார்.
ஹவுத்தி கிளச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
நேற்று (4) இஸ்ரேலின் 2ஆவது பெரிய நகரமான டெல்அவிவ் பென்குரியன் சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஹவுத்தி கிளச்சியாளர்கள் ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் கடும் கோபமடைந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட காணொளி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ,
நாங்கள் கடந்த காலத்தில் அவர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டோம். எதிர்காலத்திலும் செயற்படுவோம். இனி ஒரு முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம். தொடர் தாக்குதல் நடத்துவோம்.
நாங்கள் இரண்டு பணிகளில் கவனம் செலுத்துகிறோம். ஒன்று ஹமாசை அழிப்பது, மற்றொன்று அவர்களிடம் இருந்து பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்பது. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை நெதன்யாகுவிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என ஹவுத்தி அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.