தொடரும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் ; பிரதமர் நெதன்யாகுவின் அறிவிப்பு
லெபனான் நாட்டின் தெற்கு மாகாணங்களில் உள்ள ஹிஸ்புல்லா படைகளின் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிராக அந்நாட்டின் தெற்கு மாகாணங்களின் மீது நேற்று இரவு முதல் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 16 பேர் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேலிய படைகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
மேலும், ஹிஸ்புல்லா படைகளின் அச்சுறுத்தல் முழுவதுமாகத் தீர்க்கப்படும் வரையில் தாக்குதல் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.