இஸ்ரேல் ஈரானுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
இஸ்ரேலிய அரசாங்கம், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இஸ்ரேல் தூதுவர் டானி டானொன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பது குறித்து இஸ்ரேல் அமைச்சரவை ஆராய்ந்து வருவதாகவும் வெறுமனே வேடிக்கை பார்க்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஈரான் படையினர் இஸ்ரேல் மீது தீவிர ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்தனர். சுமார் 200 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானுக்கு மிகவும் வலுவானதும் வேதனைக்குரியதுமான பதிலடி விரைவில் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் போர் ஆற்றல் தொடர்பில் ஈரானுக்கு நன்றாக தெரியும் எனவும் மத்திய கிழக்கின் எந்த ஒரு இடத்தையும் அடையக்கூடிய திறன் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.