கடந்த இரண்டு வருடத்தில் தான் பார்த்த ஒரே விஜய் படம் இது தான்...ராஜமௌலியே கூறிய தகவல்
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். இப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜனவரி 21, 2020 அன்று தொடங்கப்பட்டது.
ராஜமௌலி கிட்டத்தட்ட 2 வருடங்கள் இந்த படத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். படத்தின் தயாரிப்பின் போது வேறு யோசனை இல்லாமல் முழு கவனத்துடன் படமாக்கினார். ராஜமௌலியும் அப்போது வெளியான பல பிரபல நடிகர்களின் படங்களை எல்லாம் பார்க்காமல் தன் பட வேலைகளில் கவனம் செலுத்தினார். அப்போதுதான் கொரோனாவின் தாக்கம் தெளிவாகத் தெரிந்தது.
அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. பார்வையாளர்களுக்கு 50 சதவீத இருக்கைகளை அனுமதித்தால் கூட தோல்வி ஏற்படும் என்ற காரணத்தால் பல முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிட தயங்கினர். ஆனால் அப்போது நடிகர் விஜய் மட்டும் தனது மாஸ்டர் படத்தை தைரியமாக வெளியிட்டார்.
ராஜமௌலிக்கு மட்டும் எப்படி இவ்வளவு தைரியம் என்று யோசித்தார். அந்த ஆச்சரியமும் அவரை மாஸ்டர் படத்தைப் பார்க்கத் தூண்டியது. அதன் பிறகு மாஸ்டர் படத்தைப் பார்த்தார். இங்கு விஜய்யின் நடிப்பு பிரமாதம் என்றும், அனிருத்தின் இசை அற்புதம் என்றும் ராஜமௌலி தற்போது கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான மாஸ்டர் பீஸ் திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளது.
பலர் தங்கள் படங்களை வெளியிடத் தயங்கிய நிலையில், மாஸ்டர் படம் மட்டும் திரையரங்குகளில் தைரியமாக வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு பல பத்திரிகைகளால் உடனடியாகப் பாராட்டப்பட்டது. தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியும் இந்த நிகழ்வை குறிப்பிட்டு விஜய்யை பாராட்டியுள்ளார்.