டிரம்பை கண்டித்த இத்தாலி பிரதமர்; ஈரான் கிண்டல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போப் ஆண்டவரை விமரிசித்ததை தொடர்ந்து, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலைட்யில் மெலோனியின் இந்த துணிச்சலான நிலைப்பாட்டை தொடர்ந்து, ஈரானின் கானா நாட்டு தூதரகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஒரு கிண்டலான பதிவு வைரலாகி வருகிறது.

அமெரிக்காவுடனான நட்பு விரிசல் அடைந்துள்ள நிலையில், "அன்புள்ள இத்தாலியே, உங்கள் பிரதமர் போப் ஆண்டவரை பாதுகாத்து வாஷிங்டன் கூட்டணியை இழந்துள்ளார். அந்த வெற்றிடத்தை நிரப்ப நாங்கள் விண்ணப்பிக்கிறோம் என ஈரான் கிண்டலாக குறிப்பிட்டுள்ளது.
"எங்களிடம் 7,000 கால நாகரிகம் உள்ளது ட்ரம்ப்பின் கவனத்தை விட, ஈரானிய உணவை தயாரிக்க அதிக நேரம் எடுக்கும்" என்றும், ஐஸ்கிரீமை கண்டுபிடித்தது யார் என்பதில் மட்டுமே ஈரானுக்கும் இத்தாலிக்கும் இடையே 2,000 ஆண்டுகால 'குளிர்யுத்தம்' நடப்பதாகவும் அந்த பதிவில் நகைச்சுவை ததும்ப குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சமீபகாலமாக ஈரான் தூதரகங்கள் இது போன்ற 'மீம்' கலாச்சாரத்தையும், பாலிவுட் வசனங்களையும் பயன்படுத்தி உலக அரசியலை நையாண்டி செய்து வருகின்றன.