நடுவானில் மோதிய இரண்டு போர் விமானங்கள்: பரிதாபமாக உயிரிழந்த விமானிகள்
இத்தாலி போர் விமானங்கள் இரண்டு நடுவானில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவரும் பிரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இத்தாலி - கைடோனியா ராணுவ விமான தளத்தின் அருகே அந்நாட்டு விமானப்படையின் இரண்டு இலகுரக போர் விமானங்கள் நேற்று (07-03-2023) பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
அப்போது அந்த விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி தரையில் விழுந்தன.
ஒரு விமானம் குடியிருப்பு பகுதி ஒன்றில் ஒரு காரின் மீதும், மற்றொரு விமானம் வயல்வெளியிலும் விழுந்தன.
இந்த விபத்தில் இரு போர் விமானங்களின் விமானிகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
அதிர்ஷ்டவசமாக, தரையில் இருந்த யாரும் காயமடையவில்லை.
பலியான விமானிகளின் குடும்பத்தினருக்கும், சக போர் விமானிகளுக்கும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அனுதாபம் தெரிவித்துள்ளார்.