ஓய்வு பெறுவேன் ஆனால் இலங்கைக்கு வரமாட்டேன்; பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்!
இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். தனது ஓய்வு தொடர்பில் அவர் கூறுகையில்,
பலவருடங்களாக நான் இலங்கையின் வலைப்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்துள்ளேன், எனக்கு தற்போது 45 வயது ஆசியாவில் வேறு எந்த பெண் வீராங்கனையும் இவ்வளவு காலம் வலைபந்தாட்டத்தில் ஈடுபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை ஒருபோதும் மறக்கமாட்டேன்
2023 உலககிண்ணப்போட்டிகளின் பின்னர் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன்,என அவர்தெரிவித்துள்ளார். அதேசமயம் இலங்கை அணி நாடு திரும்பினால் கூட நான் அவர்களுடன் இலங்கை வரமாட்டேன்
.சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் கூட அவுஸ்திரேலியாவில் கழக மட்ட போட்டிகளில் விளையாடுவேன்,என தெரிவித்துள்ள அவர், இலங்கையை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
இலங்கையை பிரதிநிதித்துவம் செய்ததன் காரணமாகவே நான் இன்று உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.