ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் தொடர்பில் பரவிய வதந்தி!
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் மற்றும் ஹாங்காங் தற்காப்புக் கலை நடிகரான ஜாக்கி சானுக்கு (72) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவர் காலமாகிவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகக் பரவின.
கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அவரது பெயர் மற்றும் பிறந்த ஆண்டுடன் கூடிய தவறான பதிவுகள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இணையத்தில் பகிரப்பட்ட தகவல்கள் ஆதாரமற்ற வதந்தி
எனினும் , நடிகர் ஜாக்கி சான் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதும் , இது வதந்தி என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இணையத்தில் பகிரப்பட்ட தகவல்கள் அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்ற வதந்தி என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் உள்ள பே சுன் பொதுப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்கி சான் நேரில் கலந்துகொண்டார்.
அங்கிருந்த 900 இற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் உற்சாகமாக உரையாடிய அவர், பாடல் பாடி தனது எளிமையான சிறுவயது வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தற்போது 72 வயதாகும் ஜாக்கி சான், தமது திரைப் பயணங்களில் தொடர்ந்து தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.