யாழில் இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரம்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் தரித்து நின்ற ஹையேஸ் வாகனம் மீது இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு (07-03-2022) யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது, நேற்றிரவு நால்வர் அடங்கிய குழு ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்று தரித்து நின்ற ஹையேஸ் வாகனம் மீது தாக்குதலை நடாத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதல் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.