யாழ் வீதியில் நடந்து சென்றவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!
யாழிலுள்ள பகுதியொன்றின் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் கத்தியினால் வெட்டி நகையையும் பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்த சம்பவம் சங்கானை பகுதியில் வீதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
சங்கானை பகுதியில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று விட்டு, தனது வீடு நோக்கி குறித்த நபர் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, அவரை பின் தொடர்ந்து துவிச்சக்கர வண்டியில் வந்துள்ளனர்.
பின்னர் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் இடை மறித்து, கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து துவிச்சக்கர வண்டியில் தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்.