கனடாவில் பூனையை கொன்ற நபருக்கு சிறைத்தண்டனை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் செல்லப்பிராணியான பூனையை கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
செல்ல பிராணியை கொன்றதாக ஒப்புக்கொண்ட நபருக்கு நான்கு மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எமையின் ஜூ என்ற நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது வான்குவார் நீதிமன்றத்தினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி குறித்த பூனையை தாக்கிக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மன அழுத்தம் காரணமாக இவ்வாறு பூனையை கொலை செய்ததாக குறித்த நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதிகாலை வேளையில் தம்மை கடித்து கால் நகங்களால் கீறியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த தாம் பூனையின் வாலை பிடித்து சுவற்றில் பல தடவைகள் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
பூனையை சித்திரவதை செய்து கொலை செய்தமைக்காக குறித்த நபருக்கு நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
பூனையின் அலறல் சத்தம் கேட்டு அயலர்கள் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.