ஜப்பானில் விபத்துக்குள்ளான விமானங்கள்: 5 பணியாளர்கள் உயிரிழப்பு!
டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கிய ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
இதேவேளை, ஜப்பான் எர்லைன்ஸ் விமானம் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதால் தீப்பிடித்ததாக மேற்கட்ட தகவல் வெளியாகியிருந்தது.
விபத்து தொடர்பில் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதேவேளை, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 360-க்கும் மேற்பட்ட பயணிகள் உட்பட மொத்தம் 379 பேர் இருந்த நிலையில அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் ஜப்பானிய அரச ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடற்படை விமானத்தில் இருந்த ஊழியர்கள் 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அண்மைய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு அந்த கடலோர காவற்படை விமானம் நிகாட்டா விமான நிலையத்திற்கு செல்லவிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.