தீப்பற்றி எரிந்த விமானம்: அவசரம் அவசரமாக சறுக்கிக்கொண்டு வெளியேறிய பயணிகள்! (Video)
ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்றைய தினம் (02-01-2024) விபத்துக்குள்ளான நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள்து.
குறித்த விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது, கடலோர காவற்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Here is another video of the landing. Media reports say they could see one of the engines touching the ground. Netizens who monitor flights are saying it could be JAL flight 516 from Sapporo to Haneda. pic.twitter.com/fHknCnlJGQ
— Jeffrey J. Hall ???? (@mrjeffu) January 2, 2024
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
பயணிகள் விமானத்தின் அவசரகால வெளியேறும் கதவைத் திறந்து அதன் எமர்ஜென்சி ஸ்லைடு (சரிவுப்பாதை) வழியாக மீட்பு படையினர் பயணிகளை மீட்டுள்ளனர்.
ஒருபுறம் விமானம் தீப்பிடித்து எரிய, மறுபுறம் எமர்ஜென்சி ஸ்லைடு வழியாக பயணிகள் அவசரம் அவசரமாக சறுக்கிக்கொண்டு வெளியேறினர்.
இதுதொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
Evacuation of #JL516 via slides and while engine #2 is still running. All 379 occupants on board escaped and survived. The status of the six people aboard the Coast Guard DHC-8 aircraft is still uncertain at this point. pic.twitter.com/ESBS4FY00a
— JACDEC (@JacdecNew) January 2, 2024