உலகின் மிகப் பெரிய அணு மின் நிலையத்தை மீள இயக்கும் ஜப்பான்
உலகின் மிகப் பெரிய அணு மின் நிலையமாகக் கருதப்படும் காஸிவாஸ்கி காரிவா அணு மின் நிலையத்தின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க ஜப்பான் தயாராகி வருகிறது.
இந்த அணு மின் நிலையத்தின் பகுதி மறுதொடக்கம் குறித்து, நிகாடா மாகாண அரசு திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டு புகுசீமா அணு மின் நிலையத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்ட மூன்று கட்ட அணு விபத்துக்குப் பிறகு, ஜப்பான் தனது 54 அணு உலைகளையும் மூட முடிவு செய்தது.

“பொதுமக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், தற்போது கார்பன் வெளியீடுகளை குறைப்பதற்காகவும், சக்தி வளத்தை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உயிரி எரிபொருட்கள் மீது அதிகம் சார்ந்திருப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரச் செலவுகள், அணு மின் நிலையங்களை மீண்டும் திறக்க அரசு முடிவு எடுக்கக் காரணமாகியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன் பதவியேற்றுள்ள ஜப்பானின் புதிய பிரதமர் சானே தக்காச்சி, அணு மின் நிலையங்களை மீண்டும் இயக்குவதன் மூலம் ஆற்றல் பாதுகாப்பை அதிகரிக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.
தற்போது ஜப்பானில் செயல்படக்கூடிய நிலையில் உள்ள 33 அணு மின் நிலையங்களில் 14 மின் நிலையங்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன.