அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜப்ரி எப்ஸ்டீன் விவகாரம்; சிக்கிய பிரித்தானிய முன்னாள் பிரதமர்!
அமெரிக்க பாலியல் குற்றவாளியான ஜப்ரி எப்ஸ்டீன் விவகாரம் தற்போது உலகளவிம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் பிரபலங்கள் பலர் ஜப்ரி எப்ஸ்டீன் நடத்திய பாலியல் தீவுக்கு சென்றுள்லதாக தகவல் வெளியாகி பூதாராமாகியுள்ளது.
முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேயர் (Tony Blair) ஆலோசனை வழங்கியதற்காகப் பெற்றுக்கொண்ட "பாரிய அளவிலான" ஊதியங்கள் குறித்து, பாலியல் குற்றவாளியான ஜப்ரி எப்ஸ்டீன் மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹுட் பராக் (Ehud Barak) ஆகியோர் கலந்துரையாடிய குரல் பதிவொன்று வௌியாகியுள்ளது.

கசகஸ்தான் அரசாங்கத்திடம் பெறப்பட்ட பணம்
அமெரிக்க நீதித் திணைக்களத்தினால் அண்மையில் வௌியிடப்பட்ட ஆவணங்களின் ஒரு பகுதியாகவே இந்த குரல் பதிவு இடம்பெற்றுள்ளது. டோனி பிளேயர் கசகஸ்தான் (Kazakhstan) அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியதற்காக ஆண்டுக்கு சுமார் 11 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டதாக எஹுட் பராக் இந்தப் பதிவில் குறிப்பிடுகின்றார்.
பிளேயருக்குக் கிடைக்கும் இவ்வளவு பெரிய தொகைகள் நேரடியாக அவருக்கா அல்லது வேறு எவருக்காவது செல்கின்றதா? என்பது குறித்து எப்ஸ்டீன் சந்தேகத்தை வௌிப்படுத்தியதாகவும் அந்த குரல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் ஒரு பாலியல் குற்றவாளி எனத் தெரிந்த பின்னரும் அவருடன் எஹுட் பராக் நீண்டகாலமாக நெருங்கிய நட்பைப் பேணி வந்தமை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளை டோனி பிளேயரின் பேச்சாளர் முற்றாக மறுத்துள்ளதோடு, வௌியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் "குப்பை" என அவர் வர்ணித்துள்ளார்.
அதேவேளை டோனி பிளேயர் எப்ஸ்டீனை ஒரே ஒருமுறை மாத்திரமே சந்தித்துள்ளதாகவும், அவருடன் தனது வருமானம் குறித்து ஒருபோதும் பேசியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கசகஸ்தான் அரசாங்கத்திடம் பெறப்பட்ட பணம் பிளேயரின் தனிப்பட்ட கணக்கிற்குச் செல்லவில்லை என்றும், அது அவரது நிறுவனத்தின் (Tony Blair Associates) செயற்பாடுகளுக்காகவே பயன்படுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் காசா மறுசீரமைப்புக்கான "அமைதிச் சபையின்" (Board of Peace) உறுப்பினராக டோனி பிளேயர் அண்மையில் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்த விபரங்கள் வௌியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது