ஜோ பைடனுக்கு 80 வயது; டிவிட்டரில் வாழ்த்திய ஜில் பைடன்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நேற்று (20 நவம்பர்) 80 ஆவது பிறந்தநாள் ஆகும். எனினும் அவர் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
அவரின் மனைவி ஜில் பைடன் தமது Twitter பக்கத்தில் திரு. பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதிபர் பிறந்தநாளைத் தனிப்பட்ட வகையில் கொண்டாடினாரா என்பது குறித்தும் தகவல் இல்லை என்று கூறப்பட்டது.
நேற்று முன்தினம் (19 நவம்பர்) வெள்ளை மாளிகையில் திரு. பைடனின் பேத்தியின் திருமண நிகழ்வு நடந்தேறியது. இதற்கிடையே அவர் 2024ஆம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது இன்னும் தெரியவில்லை.
அதுகுறித்த தமது முடிவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தெரிவிக்கப்போவதாக அவர் கூறியிருக்கிறார்.
அதேவேளை முதல்முறையாக அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் ஓர் அதிபர் தனது பிறந்தநாளை வெளிப்படையாகக் கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.