சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபரை கிண்டல் செய்த நெட்டிசன்கள்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) சில தினங்களுக்கு முன் ஆற்றிய உரைக்குப் பின் கையை நீட்டியவாறு திரும்பிய போது அங்கு யாருமில்லை.
இதனால் காற்றுடன் கைகுலுக்கிக் கொண்ட காட்சி என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் பைடன் வட கரோலினாவுக்குச் சென்று அங்குள்ள மாநிலப் பல்கலைக்கழகத்தில் 40 நிமிட உரையை நிகழ்த்தினார்.
பின்னர் பைடன் தனது உரையை முடித்ததும், மேடையின் வலது பக்கம் திரும்பி, கைகுலுக்கும் நிலையில் கையை நீட்டினார் இருப்பினும் மேடையில் வேறு எவரும் இல்லை.
இந்த சம்பவம் தொடர்பில் ருவிற்றரில் பகிரப்பட்ட இந்த காணொளியை ‘காற்றில் கை குலுக்கிய அமெரிக்க அதிபர்’ என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.