கமலா ஹரிஸிடம் அதிகாரித்தை ஒப்படைக்கும் ஜோ பைடன்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், (Joe Biden) தனது அதிகாரங்களை தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா ஹரிஸிடம் (kamala Harris) கையளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே, ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் உப ஜனாதிபதி கமலா ஹரிஸிடம் இன்று முதல் கையளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையில் இருந்து தகவல் வெளியாகிவருகின்றன.
ஜோ பைனடனுக்கு ’கொலோனோஸ்கோபி' எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு அனஸ்திசியா (மயக்க மருந்து) கொடுக்கப்படும்.
இதனால், அதிபருக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபரான கமலா ஹாரிசிடம், ஜோ பைடன் கையளிக்க உள்ளதாக இந்தத் தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.