4 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்று குடியரசுக் கட்சியின் RNC ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
532 நாட்கள் என்பது பைடனின் பதிவிக்காலத்தில் 40% ஆகும். ஒரு சராசரி அமெரிக்க அரசு ஊழியர் 48 ஆண்டிற்கு எடுக்கக்கூடிய விடுமுறையை பைடன் 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரு அரசு ஊழியர் ஆண்டிற்கு 10 முதல் 14 நாட்கள் மட்டும் தான் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
2023ல் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அப்போது பதில் அளித்த வெள்ளை மாளிகை விடுமுறையின் போதும் ஜோ பைடன் தனது ஜனாதிபதி கடமைகளில் தீவிரமாக ஈடுபடுவதாகக் கூறியது.