ஈரான் மீதான போரில் இணையுங்கள் ; சர்வதேசங்களுக்கு அழைப்பு விடுத்த நெதன்யாகு
ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான சக்திகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரில் சர்வதேச தலைவர்கள் கைகோர்க்க வேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் தெற்கு நகரமான ஆராத் (Arad) பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் களத்திலிருந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சில நாடுகள் ஏற்கனவே இந்த போரில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்த நெதன்யாகு, ஏனைய நாடுகளும் இதில் பரந்த அளவில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஈரான் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவதாகவும், ஐரோப்பாவின் உட்பகுதிகள் வரை நீண்ட தூர இலக்குகளைத் தாக்கும் வல்லமையை ஈரான் கொண்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஈரானின் செயற்பாடுகள் உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி வருவதால், சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.