இந்திய பிரதமர் மோடிக்காக கார் ஓட்டிய ஜோர்தான் இளவரசர்
மேற்காசிய நாடான ஜோர்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டின் பட்டத்து இளவரசரும் ஒரே காரில் சென்று அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜோர்தான் தலைநகர் அம்மானுக்கு சென்றார்.

அப்போது இருதரப்பு உறவு குறித்தும், பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, ஜோர்டான் பட்டத்து இளவரசர் இரண்டாம் அல் ஹுசைன் பின் அப்துல்லா, அம்மானின் ராஸ் அல்-ஐன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோர்டான் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார்.
10 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய விலங்கு எலும்புகள் மற்றும் 9,000 ஆண்டுகள் பழமையான சிலைகள் உள்ள உலகின் மிகப் பழமையான அருங்காட்சியமாக அது கருதப்படுகிறது. பிரதமர் மோடிக்காக, ஜோர்டான் பட்டத்து இளவரசரே காரை ஓட்டிச் சென்றார்.