அமெரிக்கவாழ் இலங்கையர்களை சந்தித்த தூதுவர் ஜூலி சங்
அமெரிக்கவாழ் இலங்கையர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் வொஷிங்டனில் நடைபெற்றது.
இச்சந்திப்பு வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் நடைபெற்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்புக் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தூதுவர் ஜூலி சங்,
"இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்டனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையிலான 75 வருடகால நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினேன்" என குறிப்பிட்டுள்ளார்.
I'm back in Washington this week. First on my agenda: meeting with members of the DC-based diaspora community to share stories and insights, strengthen relationships, and continue to build on #USSriLanka75 together. Thank you for hosting, @AmbSamarasinghe! pic.twitter.com/5h3oUCR1l5
— Ambassador Julie Chung (@USAmbSL) June 10, 2023
அதேசமயம் இலங்கை - அமெரிக்காவுக்கு இடையிலான 75 வருடகால இராஜதந்திர உறவுகளின் பின்னணியில் இச்சந்திப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்திருப்பதாக அமெரிக்காவிலுள்ள இலங்கைத்தூதரகம் தெரிவித்துள்ளது.