கனேடிய பிரதமருக்கும் மன்னர் சார்ள்ஸிற்கும் இடையில் சந்திப்பு
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, மன்னர் மூன்றாம் சர்ள்ஸை சந்தித்துள்ளார்.
காலஞ்சென்ற இரண்டாம் ஏலிசபத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றுவதற்காக பிரதமர் ட்ரூடோ பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்றைய தினம் பிரதமர் ட்ரூடோ, மன்னர் சார்ள்ஸை சந்தித்துள்ளார். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பஹாமஸ் உள்ளிட்ட நாடுகளின் அரச தலைவர்களும் மன்னர் சார்ள்ஸை சந்தித்துள்ளதாக அரச குடும்ப வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் மகாராணிக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
மேலும், இரங்கல் புத்தகத்தில் பிரதமர் தனது இரங்கல்களை வெளியிட்டுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பிரதமர் ட்ரூடோ உள்ளிட்ட பல அரச தலைவர்கள் பங்குபற்ற உள்ளனர்.
கனடாவின் ஆளுனர் நாயகம், பழங்குடியினத் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.