காதலிக்காக கனடியர்களைப் பகைத்துக் கொண்டாரா ஜஸ்டின் ட்ரூடோ?

Canada
By Kamal Jun 15, 2026 01:29 PM GMT
Report

 கனடா வரலாற்றில் முதன்முறையாக அதன் சொந்த மண்ணில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இரவில், நாட்டின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  கனடாப் போட்டியைப் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள தனது காதலியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவம் கனடிய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர் கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டு முயற்சியாகத் தொடங்கியுள்ளது.

ஜூன் 12 அன்று, கனடாவின் டொரன்டோ நகரில் கனடா அணி தனது முதல் வரலாற்றுத் தொடக்க ஆட்டத்தில் போஸ்னியா-ஹெர்செகோவினாவுடன் மோதியது.

காதலிக்காக கனடியர்களைப் பகைத்துக் கொண்டாரா ஜஸ்டின் ட்ரூடோ? | Justin Trudeau Shrugs Off Criticism

நாடு முழுவதும் இந்தத் தேசியப் பெருமிதக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த வேளையில், முன்னாள் பிரதமர் ட்ரூடோ டொரன்டோவில் இருக்கவில்லை.

மாறாக, அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள SoFi அரங்கில் அமெரிக்கா மற்றும் பராகுவே இடையேயான போட்டியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தார்.

இந்த விபரம் இணையத்தில் பரவத் தொடங்கியதும் கனேடிய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கடும் கோபம் வெடித்தது. விமர்சனங்கள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, ஜஸ்டின் ட்ரூடோ தனது 'X' (ட்விட்டர்) தளத்தில் இதற்கு நகைச்சுவையாக விளக்கமளித்தார்.

"சில நேரங்களில் ஒரு ஆதரவான காதலனின் கடமைகள் நம்மை அழைத்து விடுகின்றன. ஆனால் நான் யாருடைய வெற்றியை நேசிக்கிறேன் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்" — என கனடா நாட்டுக் கொடியின் சின்னத்துடன் அவர் பதிவிட்டிருந்தார்.

ட்ரூடோவின் இந்தக் காதலி வேறு யாருமல்ல, உலகப் புகழ்பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி (Katy Perry) ஆவார். அன்றைய தினம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடக்க விழாவில் கேட்டி பெர்ரி மேடையேறிப் பாடினார்.

தனது காதலியின் இந்த முக்கியமான தருணத்தில் அவருடன் இருக்கவே ட்ரூடோ கனடாப் போட்டியைத் தவிர்த்துள்ளார்.

அதே மேடையில் கேட்டி பெர்ரி கனடா மற்றும் அமெரிக்கக் கொடிகளின் பின்களை  அணிந்து இரு நாடுகளுக்கும் மரியாதை செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மான்ட்ரியல் நகரில் இந்த ஜோடி முதன்முதலில் இணைந்து பார்க்கப்பட்டதிலிருந்து இவர்களின் காதல் பொதுவெளியில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது. சமீபத்தில் நியூயார்க் ட்ரைபெகா திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் இருவரும் அதிகாரப்பூர்வமாக ஜோடியாக வலம் வந்தனர்.

ஒரு காதலனாகத் தனது காதலியின் வாழ்வின் முக்கிய தருணத்தில் அவரோடு இருப்பதில் எந்தத் தவறும் இல்லை எனச் சிலர் வாதிடுகின்றனர்.

நாட்டின் தலைவராக இருந்த ஒருவர், கனடா மண்ணில் கால்பந்து வரலாறு எழுதப்பட்ட அந்தத் துல்லியமான தருணத்தில் மைதானத்தில் இருந்து வீரர்களை ஊக்குவித்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகின்றனர். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US