கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி: அவரே வெளியிட்டுள்ள தகவல்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா இன்று வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
எனவே தன் நாட்டு மக்களை பாதுகாக்க ஒவ்வொரு அரசாங்கமும், தடுப்பூசியை செலுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த டுவிட்டில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021