கட்டுநாயக்க ஹோட்டலில் தவறி விழுந்து உயிரிழந்த ரஷ்ய துணை விமானி!
இலங்கையில் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவையின் துணை விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ரஷ்ய விமானி கட்டுநாயக்க பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்றிரவு தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
63 வயதான துணை விமானி நேற்றிரவு 10:00 மணியளவில் அவர்கள் தங்கியிருந்த கட்டுநாயக்க பீல்லவத்தை பகுதியில் உள்ள ஹோட்டலில் உள்ள வடிகாலில் விழுந்துள்ளார்.
பின்னர் கட்டுநாயக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று விமானியை நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதையடுத்து அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் அவரை பரிசோதித்து அவர் இறந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் துணை விமானி இன்று மதியம் 12.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு புறப்பட்டு ஏரோப்ளோட் விமானத்தின் துணை விமானியாக பணிபுரிய திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்டு வருகின்றது.