பட்டினி கிடந்து 191பேரை உயிரிழக்கத் தூண்டிய மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை!
கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின் தலைவரான பால் மெக்கென்சி, 191 பேரின் கொலைக்காக வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அன்று 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
பட்டினி கிடந்து உயிரிழந்தோரில் 191 பேரில் 190 பேர் குழந்தைகள் ஆவர். மொம்பாசா உயர் நீதிமன்றத்தில், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருபத்தி நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

உயிரிழந்தோரில் 191 பேரில் 190 பேர் குழந்தைகள்
Good News International Church அமைப்பின் நிறுவனரான மெக்கென்சி, தனது பின்தொடர்பவர்களை வீடுகளை விட்டு வெளியேறி, கிழக்கு கென்யாவில் உள்ள ஷாகஹோலா வனப்பகுதிக்குச் செல்லுமாறு தூண்டினார்.
பட்டினி கிடப்பதன் மூலம் அவர்கள் இறைவனை நெருங்க முடியும் என்றும், சொர்க்கத்திற்குச் செல்லத் தயாராக முடியும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஜனவரி 2021 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில், 190 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவரைக் கொன்ற குற்றத்திற்காக, மெக்கென்சி மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 28 பேர் கடந்த மாதம் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மெக்கென்சியின் வழக்கறிஞர், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். 2023-ஆம் ஆண்டு முதல், கடற்கரை நகரமான மாலிண்டிக்கு அருகில் உள்ள இந்த மதக் குழுவின் தளத்தில் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இது ‘ஷாகஹோலா வனப் படுகொலை’ என்று அழைக்கப்படுகிறது. கென்ய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 429 ஆக உள்ளது இதில் சில உடல்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை.
உயிரிழப்புகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மெக்கென்சிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் நீதிமன்றத்திடம் வலியுறுத்தியிருந்தது. இது குறித்து அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் ஜாமி யமினா, “மெக்கென்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என கென்யா அரசாங்க்கம் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த தவல்கள் தெரிவிக்கின்றன.