கேரளாவில் ஏற்பட்ட பயங்கர நிலசரிவு... இதுவரை 107 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 107 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில், வயநாடு பகுதியில் நேற்றிரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இன்றையதினம் அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும் அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
Man stuck in mud in Mundakayi area, Wayanad, Kerala.#WayanadLandslide #Wayanad #Kerala #BREAKING pic.twitter.com/yWQKsTe53r
— Chaudhary Parvez (@ChaudharyParvez) July 30, 2024
இந்த நிலசரிவில் 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நிலசரிவில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகின்றது.