கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்
கனடாவிலுள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் தீவிரவாதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.
கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவை கோவில் மீது நேற்று (20) காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்து அமைப்பின் அறிக்கை
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், மற்றுமொரு இந்து கோவிலான லட்சுமி நாராயணன் கோவிலையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
கோவிலின் சுவர்களை சேதப்படுத்தியுள்ளதோடு அச் சுவர்களில் மையில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து கனடாவில் உள்ள இந்து அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் : காலிஸ்தான் தீவிரவாதிகளால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லட்சுமி நாராயண் கோவிலில் நடந்த நாசவேலையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்து வெறுப்பு என்ற இந்த செயலுக்கு கனடாவில் இடமில்லை. விரைவான நடவடிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் வெறுப்புக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.