ஈராகில் அமெரிக்க ஊடகவியாளர் கடத்தல் ; FBI மற்றும் ஈராக் விசாரணை தீவிரம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ஊடகவியாளர் ஷெல்லி கிட்டில்சன் (Shelly Kittleson) செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வெளியுறவுத்துறை (US State Department) தெரிவித்ததின்படி, கடத்தலுக்குப் பின்னணியில் ஈரானுடன் தொடர்புடைய கதாயிப் ஹிஸ்புல்லா (Kata'ib Hezbollah) ஆயுதக்குழு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
உலகளாவிய பொது விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டிலான் ஜான்சன் கூறியதாவது,

வாஷிங்டன் நிர்வாகம் சம்பவம் தொடர்பாக நன்கு அறிந்துள்ளது. கடத்தப்பட்ட ஊடகவியலாளருக்கு முன்னேச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்தது.
கடத்தலின் போது ஏற்பட்ட வாகன விபத்து தொடர்பாக, ஒரு சந்தேக நபர் ஈராக் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் காயமடைந்த நிலையில் ஊடகவியலாளருடன் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலைச் சார்ந்த செய்திகள் சேகரிக்கும் போது இது நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பு FBI மற்றும் ஈராக் அதிகாரிகளுடன் இணைந்து, கடத்தப்பட்ட ஊடகவியாளரை விரைவாக மீட்க அமெரிக்க வெளியுறவுத்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் டிலான் ஜான்சன் தெரிவித்தார்.