கார் வெடிகுண்டு மூலம் பெண் கொடூர கொலை: ஒப்புக்கொண்ட இரு சகோதரர்கள்
மால்டா பெண் பத்திரிகையாளரைக் கொன்ற வழக்கில் இரண்டு சகோதரர்களுக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ல் நடந்த இந்த கொலையானது உலக நாடுகளில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பத்திரிகையாளர் டாப்னே கருவானா கலிசியா என்பவரை கொலை செய்ததாக ஜார்ஜ் மற்றும் ஆல்ஃபிரட் டிஜியோர்ஜியோ ஆகிய இருவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
2017ல் நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தில், முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு இருக்கும் என்றே பலர் கருதினர். 53 வயதான டாப்னே கருவானா கலிசியா மால்டா மற்றும் வெளிநாடுகளில் ஊழல் பேர்வழிகளின் முகமூடிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார்.
மேலும் மால்டா அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். கருவானா கலிசியா கொல்லப்பட்ட ஆண்டு, பிரதமர் ஜோசப் மஸ்கட் தொடர்பான ஊழல்கள் அம்பலமான நிலையில், பொதுத் தேர்தலுக்கு கருவானா கலிசியா காரணமானார்.
இந்த வழக்கில், கார் வெடிகுண்டு தொடர்பில் இருவர் கைதானதாக கடந்த ஆண்டு மால்டா அதிகாரிகள் அறிவித்தனர். மேலும், மூன்றாவது நபர், இந்த வழக்கில் தொடர்புடையதாக ஒப்புக்கொண்ட நிலையில், 15 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், கருவானா கலிசியாவை கொல்ல கொலைகாரர்களை ஏவியதாக கூறப்படும் தொழிலதிபர் ஜோர்கன் ஃபெனெக் இதுவரை சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.