தென் கொரியா மீது பழிப்போட்ட கிம்!
வடகொரொயா கொரோனா பரவலில் இருந்து முற்றாக விடுபட்டுள்ளதாக கிம் ஜோங் உன் (Kim Jong Un)அறிவித்துள்ள நிலையில், இந்த இக்கட்டான நிலைக்கு காரணம் தென் கொரியா தான் என மிரட்டல் விடுத்துள்ளார் அவர் சகோதரி கிம் யோ ஜோங்(Kim Yo Jong).
கொரோனா பரவல் உலகம் மொத்தமும் வியாபித்திருந்த கட்டத்தில், வட கொரியா மட்டும் பாதுகாப்பாக, எவருக்கும் பாதிப்பின்றி இருப்பதாக அறிவித்திருந்தது.தடுப்பூசி வழங்கலும் பெரிதாக அனுமதிக்கப்படவில்லை.
சீனா மட்டும் அவர்களுக்கு சொந்த தயாரிப்பான தடுப்பூசியை வட கொரியாவுக்கு வழங்கியது. இந்த நிலையில், சமீபத்தில் வடகொரியா கொரோனா பரவலால் கடும் அவதிக்குள்ளானது.
இருப்பினும் சீனாவை மட்டுமே நம்பியதுடன், அவர்களிடம் இருந்தே மருத்துவ உதவியை நாடியது. தற்போது, கொரோனா பாதிப்பில் இருந்து வட கொரியா மீண்டுள்ளதாக கிம் ஜோங் உன் (Kim Yo Jong)உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தென் கொரியா எல்லையில் ஏற்பட்டுள்ள நடமாட்டம் காரணமாகவே, தங்கள் நாட்டில் கொரோனா பரவியது என வடகொரியா தரப்பு குற்றஞ்சாட்டி வந்துள்ளது. இதை தென் கொரியா முற்றாக மறுத்துள்ளது.
தென் கொரியாவின் செயலை கடுமையாக விமர்சித்த கிம் யோ ஜோங்(Kim Yo Jong), பலூன் பறக்க விடுவது, துண்டு பிரசுரங்களை வடகொரியாவில் வீசுவது உள்ளிட்ட செயல்களால் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தை தென் கொரியா செய்துள்ளது என்றார்.
இதன்போது பல நாடுகள், உலக சுகாதார அமைப்பு உட்பட கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது, பாசுபட்ட பொருட்களால் கொரோனா பரவும் அபாயம் அதிகம் என, இருப்பினும் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை என்றார்.
தென் கொரியா எங்கள் பிராந்தியத்திற்கு துண்டு பிரசுரங்கள், பணம், மோசமான சுவரொட்டிகள் மற்றும் பொருட்களை அனுப்புவது மிகவும் கவலை அளிக்கிறது.
இது மேலும் தொடரும் என்றால் கட்டாயம் பதிலடி கடுமையாக இருக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.