சுவீடன் மன்னர் கனடா விஜயம்
சுவீடன் மன்னர் கார்ல் XVI கஸ்டாஃப் மற்றும் மகாராணி சில்வியா நவம்பர் 18ஆம் திகதி கனடாவுக்கு விஜயம் செய்யஉ ள்ளனர். கனடா ஆளுநர் நாயகம் மேரி சைமன் இந்த விடயத்த அதிகாரபூர்வமான அறிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சுவீடன் மன்னர் வருகை தருவதாக ஆளுநர் நாயகம் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயத்திற்கான முழுமையான நிகழ்ச்சி நிரல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மன்னரும் மகாராணியும் ஒட்டாவா மற்றும் மாண்ட்ரியல் நகரங்களுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னரும் மஹாராணியும், கனடா–சுவீடன் உறவுகளை “மேலும் வலுப்படுத்தும்” பல நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவீடன் என்பது கனடாவின் “முக்கியமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டாளி” என குறிப்பிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடாவின் ஆர்க்டிக் வெளிநாட்டு கொள்கை முக்கியப் பங்காக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அறிவிப்பில் வழங்கப்பட்ட பின்னணி தகவலின்படி, கனடா–ஐரோப்பிய ஒன்றியம் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) அடிப்படையில் ஸ்வீடனின் பெரும்பாலான ஏற்றுமதி பொருட்களுக்கு மீதான சுங்க வரிகள் நீக்கப்பட்டுள்ளன.