மன்னர் சார்லஸுக்கு பொது இடத்தில் நேர்ந்த நிலை!
பிரித்தானியாவின் புதிய மன்னரான சார்லஸ் (King Charles III) , கார்டிஃபில் மக்கள் கூட்டத்தை நேரில் சந்தித்தபோது, நீங்கள் என் மன்னர் இல்லை என பிரித்தானியர் ஒருவர் கூறும் காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, சார்லஸ் (King Charles III) மன்னரானார். இருப்பினும், அவரது முடிசூட்டு விழாவை ஏற்பாடு செய்ய வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.
வேல்ஸின் முன்னாள் இளவரசரும் இப்போது புதிதாக நியமிக்கப்பட்ட மன்னருமான சார்லஸின் (King Charles III) மக்கள் கூட்டத்துடனான உரையாடல் எதிர்பாராத திருப்பத்தை எட்டியது.
இதன்போது கோபமடைந்த பிரித்தானியர் ஒருவர் நாட்டில் வரி செலுத்துபவர் தாங்க வேண்டிய நிதிச்சுமை குறித்த கேள்விகளுடன் மன்னரை எதிர்கொண்டார்.
மக்கள் சந்திப்பு
புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் (King Charles III) கார்டிஃப் கோட்டைக்கு வெளியே பொதுமக்களை சந்தித்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மன்னர் (King Charles III) கூட்டத்தில் இருந்தவர்களுடன் கைகுலுக்கிச் சிரித்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒருவர் எங்கள் வீடுகளை சூடாக்க நாங்கள் போராடும்போது, உங்கள் அணிவகுப்புக்கு நாங்கள் பணம் செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவோர் எதற்காக உங்களுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் பணம் செலுத்த வேண்டும்? நீங்கள் என் மன்னர் இல்லை என கூறியுள்ளார். மன்னர் மௌனமாகத் திரும்பியதால், அந்த மனிதனின் குற்றச்சாட்டுக்கும் மோதலுக்கும் மன்னர் பதிலளிக்கவில்லை.
அரச குடும்பத்திற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து இறையாண்மை மானியம் (sovereign grant) என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது. இது பிரித்தானியாவின் கருவூலத்தால் அரச குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.